ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை திருடி விடுவார்கள் என்பது போல் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள BSNL அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியும், பெண்கள் சிலர் தாலியை ஏந்தியும் மோடி பேசியதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.