kovai : ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணி – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!

1 Min Read

கோவையில் ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் செங்கொடிகளை ஏந்தி பங்கேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image

கோவையில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு சங்கத்தினர் பங்கேற்ற மே தின பேரணி புதன்கிழமை அன்று நடைபெற்றது.

ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணி

காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த பேரணி நஞ்சப்பாசாலை, 100 அடி சாலை வழியாக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்று டாட்டாபாத் ஆறு முக்கு பகுதியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் செங்கொடிகளை ஏந்தியவாறு 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணி

அதை தொடர்ந்து 6 முக்கு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அப்போது பத்தாண்டு கால பாஜக ஆட்சியை அகற்றி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைத்திட உறுதி ஏற்று கொண்டனர்.

Share This Article
Leave a review