கோட்டகுப்பம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த கோட்டகுப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனர்.

பட்டாசு ஆலையில் பணியாளர்கள் மற்றும் ஆலையின் உரிமமையாளர் இன்று பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த விபத்தில் சிக்கி கொண்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன், கெளரி ஆண்டாள் ஆகியோரை உடன் பணியாற்றியவர்கள் காப்பாற்றி, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மரக்காணம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதின் பேரில் விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தண்ணீரை பீச்சு அடித்து பட்டாசு ஆலையில் எரிந்த தீயை அனைத்தனர்.

சில மணி நேரம் கழித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்ட உடன் அலறியடித்து கொண்டு வெளியே சென்றுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டகுப்பம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.