கேரளாவில் சாவியுடன் காருக்குள் சிக்கிய இரண்டரை வயது சிறுவனை பல மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கேரளா மாநிலம், அடுத்த திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூர் பகுதியில் இரண்டரை வயது சிறுவன் காரில் விளையாடி கொண்டிருந்த திடிரேன்று சிக்கி கொண்டான்.

இன்று காலை வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குழந்தை ரிமோட் சாவியுடன் காருக்குள் நுழைந்து கதவை தெரியாமல் பூட்டி உள்ளது. குழந்தை காரில் சிக்கியதை பார்த்த வீட்டார்கள் டூப்ளிகேட் சாவியை எங்கு தேடியும் கிடைக்காததால் விழிஞ்சம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காருக்குள் சிக்கிய குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.