கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி தாலுகா பகுதி கண்ணங்குழி என்ற இடத்தில் ஷிபு என்பவர் விட்டின் பின்புறம் உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று திடீரென்று தவறி விழுந்து உள்ளது.

வீட்டின் பின்பற கிணற்றில் இருந்து பயங்கர சத்தம் ஒன்று வந்து உள்ளது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த ஷிபு வீட்டின் பின்பற கிணற்றில் வந்து பார்த்து உள்ளார்.

கிணற்றில் சிறுத்தை ஒன்று சத்தம் போட்டு வெளியே வரமுடியாமல் இருந்து உள்ளது என குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, ஷிபு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கிணற்றில் விழுந்த சிறுத்தை பார்த்து நீண்ட நேரம் போராடி கிணற்றில் பெரிய கம்பை இறக்கி சிறுத்தையை காப்பாற்றினார்.