கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் முக்கம் புல்பரம்பாவின் உள்ள சாலையில் நடந்த இந்த விபத்திலிருந்து பைக் ஓட்டுநர் அதிசயமாக உயிர் தப்பினார். அப்போது தனியார் பேருந்து சாலையில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே ஸ்கூட்டி பைக்கில் வந்த நபர் தவறி கீழே விழுகிறார்.

பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பேருந்தை வளைத்து மாற்றியதால், பைக் ஓட்டுநர் அதிஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார். அதில் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த உடன் அருகில் நின்றவர்கள் கீழே விழுந்த பைக் எடுக்க உதவி செய்தனர்.

இந்த விபத்து நடந்து இடத்தின் அருகில் உள்ள சிசிடியில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதில் ஓட்டுநரின் பெரும் சாமர்த்தியத்தாலே விபத்து தவிர்க்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அப்போது பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.