சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சனிக்கிழமை நடத்தும் மகளிர் உரிமை மாநாடு, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெண்கள் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்தவே என்று தமிழக எம்பி கனிமொழி பேசினார் .
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்நாடு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டிற்குத் தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி முன்னிலை வகிப்பார் .
நாடு முழுவதிலுமிருந்து, குறிப்பாக INDIA கூட்டணியை சேர்ந்த ஏராளமான பெண் அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே, மெகபூபா முப்தி, டிம்பிள் யாதவ், சுஷ்மிதா தேவ் மற்றும் சுபாஷினி அலி ஆகியோர் அடங்குவர்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
இந்த மாநாடு குறித்து திமுக எம்பி கனிமொழி பேசிய பொது “இந்த மாநாடு உண்மையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாகும். அவர் எப்போதும் பெண்களின் உரிமைகள் மற்றும் முனேற்றத்திற்காக நின்றார். எனவே அவரது நினைவைப் போற்றுவதற்கு இதுவே சரியான வழி என்று நாங்கள் நினைத்தோம். தேர்தல் நெருங்கி வருவதால், பெண்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த ஒரு மேடையாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம் .
நாட்டில் தற்போது மதம், ஜாதி, பாலினம் அடிப்படையில் நிறைய மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. இதை நாங்கள் மணிப்பூர் சம்பவத்தில் நேரடியாக பார்த்தோம் .இந்த மோதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த மோதல்கள் எப்படி உருவாகுகின்றன அவற்றை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி பேசுவது முக்கியம் .
பாஜக கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த போதிலும் எங்களுக்கு பல கேள்விகள் உள்ளன. இது செயல்படுத்தப்படுவதற்கு 10, 20, 50 அல்லது எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாலும் ஆகலாம் என்று கனிமொழி கருது தெரிவித்துள்ளார் .
இந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக நாட்டில் நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் விவாதிக்க விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார் .