பாஜக தலைவர் அண்ணாமலை நாமக்கல் பாஜக வேட்பாளரை ஆதரித்து கடந்த 4 ஆம் தேதி வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசுகையில்;- பனங்காட்டுபாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகிறார்கள்.
திமுக காரர் நடத்துவதால் பெரிதாக்கமாட்டார்கள், திமுககாரர் எனச்சொல்லாமல், அரசியல் பிரமுகர் நடத்துகிறார் என பயத்தின் காரணமாக சொல்கிறார்கள்.

ஒரு டாஸ்மாக் கடையில் கிடைக்கும் ஒரு பொருளை, எரிசாராயத்தை கலந்து பாட்டிலில் அடைத்து, லேபிள் ஒட்டி டாஸ்மாக் கடைக்கு இவங்களே விற்பனை செய்கிறார்கள்.
டி.ஆர்.பாலு கம்பெனியில் தான் வாங்குவீங்களா? என்கிட்ட வாங்கமாட்டீங்களா? என அந்தளவுக்கு கிராமம் கிராமமாக, மது மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது. இதற்கு எல்லாம் சட்டையடி கொடுக்க வேண்டும் அது உங்கள் ஓட்டில் இருக்கிறது என பேசினார்.

அண்ணாமலையால் வெளிசத்துக்கு வந்த போலி மதுபான ஆலை பனங்காட்டுபாளையத்தில் கள்ளச்சராயம் காய்ச்சுகிறார்கள் என அண்ணாமலை வெளிப்படையாக பேசியதை அடுத்து, போலி மதுபான ஆலையை சீல் வைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி சாலையிலுள்ள, பனங்காட்டு பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடமுள்ளது.

அந்த இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது 5400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் 60 ஆயிரம் காலி மது பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி, உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியிலுள்ள அரசு மதுபான கடை எண் 6002-ல் பார் நடத்தி வருபவர், மற்றும் விழுப்புரம் மாவட்டம், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மற்றும் முரளி, ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (எ) மாதேஸ்வரன் தான், இந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

மேலும் போலி மதுபான ஆலையில் இருந்த நான்கு சக்கர வாகனம், ஒரு இரண்டு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணையில் பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட்டை, 35 லிட்டர் கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்துள்ளனர்.

திருச்செங்கோட்டில் உள்ள 13 அரசு மதுபான கடைகளில், குறிப்பாக ராசிபுரம், பரமத்தி வேலூர், கொல்லிமலை சேந்தமங்கலம் உட்பட தமிழகத்தின் பல இடங்களுக்கும், சட்ட விரோதமாக இங்கு தயாரிக்கப்பட்ட மதுவை விற்றதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதில் யார், யாருக்கு தொடர்பு இருக்கு, இங்கு தயாரித்து மதுபாட்டில்கள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன, என்பது குறித்தும், டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்செங்கோடு ஒன்றிய திமுக பெண் கவுன்சிலரின் கணவர், வட்டூர் தங்கவேலுவுக்கு சொந்தமான இடத்தில் தான், போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்துள்ளது. போலி மதுபான ஆலையில் தங்கவேலுவுக்கும் தொடர்பு இருக்கலாமோ? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் தயார் செய்துள்ளனர், என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை காவல் நிலைய ஆய்வாளர் சுல்தான் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்களுடன், போலீசாருமே பிடிபடுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது மக்கள் அதிகமாக கூடும் சாலையில் போலி மதுபான ஆலை இயங்கி வந்தது, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொழில் இங்கு அமோகமாக நடைபெற்று வருவதும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல்லில் இருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் சூழல் உள்ளது.

திருச்செங்கோடு காவல்துறையினர் பல லட்சங்கள் லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்படும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.