காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான (ஆர்ஜேடி) கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் பாஜவுடன் கைகோர்த்து, 9-வது முறையாக பீகார் முதல்வராக நேற்று பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா மற்றும் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்தியாவில் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைய அடித்தளமாக செயல்பட்டவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். கூட்டணியின் முகமாக அனைத்து கட்சிகளும் தன்னை அங்கீகரிக்கும் என்ற நிதிஷின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் வழக்கம் போல் கூட்டணி மாற முடிவு செய்தார்.

பீகாரில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி நடந்தது. இக்கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க நிதிஷ் முடிவு செய்தார். இந்நிலையில், எதிர்பார்த்தபடியே நிதிஷ்குமார் நேற்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ் குமார்;-
இந்தியா கூட்டணிக்காக நான் எந்தளவுக்கு பாடுபட்டேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாநிலத்தில் மகாகட்பந்தன் கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. இந்த கூட்டணியில் எதுவும் சரியாக நடக்கவில்லை. அங்கு எந்த வேலையும் முறைப்படி நடக்கவில்லை. எனவே இரு கூட்டணிகளில் இருந்து விலக முடிவு செய்தேன். கட்சியில் அனைவரிடமும் ஆலோசனை கேட்ட பிறகுதான் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார்.

இதன் மூலம், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையேயான மகாகட்பந்தன் கூட்டணி அரசு 18 மாதத்தில் கவிழ்ந்தது. அதே சமயம், 45 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட நிதிஷ் குமாருக்கு 78 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக கட்சி ஆதரவு அளித்தது. முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் சுயேச்சை ஒருவரும் ஆதரவு தெரிவித்தனர். அதை தொடர்ந்து, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காலையில் முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்த நிலையில், மாலையில் புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இதில், 9-வது முறையாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நிதிஷுடன் துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்கா ஆகியோர் பொறுப்பேற்றனர். பீகாரில் அமைந்த புதிய அரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக பீகாரில் ஏற்பட்ட அரசியல் பரபரப்பு அடங்கி உள்ளது. பீகாரின் நீண்ட கால முதல்வரான நிதிஷ்குமார், 9-வது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கூட்டணியை மாற்றி, தொடர்ந்து முதல்வர் அரியணையில் வீற்றிருக்கும் நிதிஷ்குமாரின் சாணக்கியத்தனத்தை பாராட்டுபவர்களை விட விமர்சிப்பவர்கள் தான் அதிகம்.

தனது சுய அரசியல் லாபத்திற்காக கூட்டணி தர்மத்தை தூக்கி எறிந்து கொண்டிருக்கும் நிதிஷை ‘சந்தர்ப்பவாதி, பச்சோந்தி, பல்டு ராம்’ என பல பட்டப்பெயர் வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அவரது அரசியல் வாழ்க்கையை பார்க்கும், இதேபோல் தனது சுயநலத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் நிதிஷ்குமார் என்பது அம்பலமாகி உள்ளது. இந்த கூட்டணி அரசு கிட்டத்தட்ட 18 மாதங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார், தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜவுடன் கைகோர்த்திருப்பது தேசிய அரசியலில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. நிதிஷ் தந்திரமான நபர். இப்போதைய அவரது இந்த பாஜக உடனான கூட்டணி வரும் 2025 சட்டப்பேரவை தேர்தல் வரை கூட நீடிக்காது. இதற்கெல்லாம் பீகார் மக்கள் வட்டியும் முதலுமாக சேர்த்து திருப்பித் தருவார்கள்.

2025 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 20 தொகுதிக்கு மேல் ஜெயிக்காது’’ என்றார். துரோகத்தில் வல்லவரான அவரையும், அவரை ஆட வைப்பவர்களையும் பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். சரியான பாடம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன.
ஆனால், நாங்கள் திமுக, என்சிபி, டிஎம்சி, சமாஜ்வாடி போன்ற அனைத்து கட்சிகளும் பாஜவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்’’ என்றார். குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்குள் செல்கிறது. குப்பையின் துர்நாற்றத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதெல்லாம் பாஜகவுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி. எப்படியும் ஐக்கிய ஜனதா தளத்தின் கதை வரும் மக்களவை தேர்தலில் முடிவடையும்’’ என்றார்.