தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மணல் கொள்ளை நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என திருத்துறைப்பூண்டியில் பாஜக தலைவர் என் மண் என் மக்கள் யாத்திரையில் கொட்டும் மழையிலும் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.
தமிழகத்தில், என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அப்போது அண்ணாநகரில் பாஜக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க சிறப்பாக வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து வரும் வழியில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள சலவை நிலையத்தில் துணிகளுக்கு அயன் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொட்டும் மழையிலும் நனைந்தபடியே பழைய பேருந்து நிலையம் வரை சென்று, அங்கு வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசிய போது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே எந்த கட்சியும் 30 மாதங்களில் கட்சியும், ஆட்சியும் இவ்வளவு மணல் கொள்ளை அடித்து இருக்க முடியாது. அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெரிய அளவில் தமிழகத்தில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் புகார் செய்துள்ளனர். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் மட்டும் நாலாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் மணல் கொள்ளை மட்டும் நடைபெற்று உள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழக அரசுக்கு மணல் மூலமாக வந்த வருமானம் வெறும் 37 கோடி ரூபாய் மணல் விற்று பணம் அரசு கஜானாவுக்கு வந்துள்ளது என தெரிவித்தார். என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரை நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.