இஸ்ரேலில் அக்டோபர் 7 ம் தேதி தாக்குதல்களை நடத்திய பாலஸ்தீனிய ஆயுத குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் , ஹமாஸ் போராளி குழுவினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இஸ்ரேலியப் ராணுவ படைகள் தங்கள் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகின்றனர் .
காசா பகுதி மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ள நிலையில் பாலஸ்தீனப் பகுதியில் இணையம் மற்றும் மொபைல் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலுமாக முடங்கின. வெள்ளிக்கிழமை இரவுக்குப் பிறகு காசா நகரின் மீது வான்வழி தாக்குதல்கள் நிகழ்த்ப்பட்டன .
குறிப்பாக வடக்கு காசா பகுதியில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் அதிகளவில் காணப்படக்காக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன . பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம், காசாவில் உள்ள அதன் செயல்பாட்டு அறையுடனும் மற்றும் அதன் அனைத்துக் குழுக்களுடனும் முற்றிலும் தொடர்பை இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை மிகக் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாகவும் , தரைப்படைகளும் காசாவில் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் .
மேலும் தங்களது தாக்குதல்கள் வடக்கு காச பகுதியை நோக்கி இருக்கும் என்பதால் காசா நகரவாசிகளை தெற்கே செல்லுமாறு அவர் கூறினார் .
ஒரே நேரத்தில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தொடர் பீரங்கி தாக்குதல் நடத்தியதாற்கான சத்தம் கேட்க முடிந்ததாக அங்கு காலத்தில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்தனர் . வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி குண்டுகள் வடக்கில் இப்போது தீவிரமடைந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
பாலஸ்தீனிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜவ்வால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தனது சமூக வலைதள பதிவில் மொபைல் போன் மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸை வீழ்த்துவதற்கு தரைவழித் தாக்குதலை நடத்தப் போவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளார் . கடந்த நாட்களில், காசாவில் இஸ்ரேலியப் படைகள் குறைந்த அளவிலே தரை வழி தாக்குதல்களை நடத்தின.
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் 1,400 க்கும் இறந்தனர் , இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகிறது .
இந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகை செய்துள்ளது , 2.3 மில்லியன் மக்கள்தொகையை கொண்ட காசா நகரத்திற்கு உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை படிப்படியாக தாக்குதல்கள் மூலம் துண்டித்து வருகிறது . காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலின் விளைவாக இன்னும் பலர் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது .
“காசாவில் மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் ஏவுகணை மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல்காளால் மட்டும் இறக்கவில்லை , காசா பகுதியில் திணிக்கப்பட்டுவரும் முற்றுகையின் விளைவுகளால் இன்னும் பலர் இறக்க நேரிடும் ” என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) கமிஷனர் ஜெனரல் பிலிப் லஸ்ஸரினி கூறியுள்ளர் .
அடிப்படை சேவைகள் சிதிலமடைந்து வருகின்றன, மருந்துகள் தீர்ந்துவிட்டன, உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்து வருகிறது, காஸாவின் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிவாதாக அவர் தெரிவித்துள்ளார் .