இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது காங்கிரஸ் செயற்குழு .
பாலஸ்தீன மக்களின் நிலம், சுயராஜ்யம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைகளை மீட்டு தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உடனடி போர்நிறுத்தம் மற்றும் தற்போதைய மோதலுக்கு வழிவகுத்துள்ள கட்டாயப் பிரச்சினைகள் உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்,” என்று காங்கிரஸ் செயற்குழு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள போரில் காங்கிரஸ் செயற்குழு தங்களது வருத்தத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளது .

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் 4 மணி நேரம் நீடித்த காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இஸ்ரேல் மக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களை கட்சி கண்டிக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் செயற்குழு, இஸ்ரேல் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது, இது வளர்ச்சியின் புதிய முன்னுதாரணத்தை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது .
காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க வேண்டும் என்று கூறிய அதே அணுகுமுறையை தற்பொழுது நிகழும் இஸ்ரேல் பாலஸ்தீன போரிலும் பின்பற்ற வேண்டும் என்றார்.

என்ன நடந்தாலும் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உக்ரைன்-ரஷ்யா போரைப் பொறுத்தவரை, போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற அணுகுமுறையை இந்திய அரசு கொண்டிருந்தது, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போருக்கும் அதே அணுகுமுறை இந்தியா அரசு பின்பற்றி இருந்திருக்க வேண்டும் ” என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் இஸ்ரேலை ஆதரிப்பது வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை சீர்குலைக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார். இந்திய அரசு அமெரிக்காவுடனும் இரு நாடுகளுடனும் பேசியிருக்க வேண்டும், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், போர் நிறுத்தம் இருக்க வேண்டும்.
நாம் இஸ்ரேலை ஆதரித்தால், வளைகுடா நாடுகளுடனான நமது உறவுகள் மோசமடையக்கூடும். இந்தப் போரில் ஒரு நாட்டை மட்டும் ஏன் அரசு ஆதரிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை,” என்றார்.
பாஜக தலைவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், காங்கிரஸ் தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் , இந்த விவகாரத்தில் நாட்டின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவேண்டியது வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பு என்று கூறினார்.
காங்கிரஸின் பிரச்சனை என்னவென்றால், அது நாட்டின் யோசனைகளிலிருந்து நகர்ந்து தனது சொந்த சிந்தனையை திணிக்க முயற்சிக்கிறது. டோக்லாம் விவகாரத்திலும் இதேதான் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று காசா பகுதியை ஆளும் ஹமாஸ், அதன் தெற்குப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் . காசா பகுதியில், இஸ்ரேலின் எதிர்த்தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் இறந்துள்ளனர் மற்றும் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காசா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி “இப்போதுதான் தொடங்கியது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .