பாஜக அதிமுக-வுடனான தொகுதி பங்கிட்டில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூவை ஜெகன் மூர்தியார் கூறியதாவது;-
தற்போது கடைசி நேரத்தில் கை விரித்த காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற நமது கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொந்தலிபோடும், வருத்தத்தோடும், ஏமாற்றத்தோடும் இருக்கிறார்கள்.

அவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கின்ற வகையிலே தான் இன்றைக்கு அவருடைய கருத்துக்கள் எல்லாம் இங்கே பரிமாறப்பட்டிருக்கிறது.
இதை நாங்கள் பரிசீலனை செய்து இரண்டு நாட்களிலே அண்ணா திமுகவில் கூட்டணி தொடருமா? அல்லது அண்ணா திமுகவிலிருந்து வெளியேறி விடுவோமா அல்லது வேறொரு கட்சியோடு கூட்டணியில் சேர்வுமா என்பதை இரண்டு நாட்களிலே எங்களுடைய முடிவுகளை வெளியிடுவோம் என தெரிவித்தார்.

மேலும் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் நாம் தனித்து நிற்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கு இதனை பற்றி முழுமையாக தெரியவில்லை.
அதிமுகவிற்கு இடையில் என்ன நடந்தது அல்லது வேறு எதவும் சதியா என்று முழுமையாக தெரியவில்லை. அதிமுக கட்சியோடு கூட்டணி என்று நம்பிக்கையோடு இருந்தோம் இப்ப நம்பிக்கை இழுந்து நிற்கிறோம் என பூவை ஜெகன் மூர்த்தியார் தெரிவித்தார்.

இதனால் நமது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சில நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து வெளியேறி விடலாம் என்றும் சில நிர்வாகிகள் அதிமுகவில் இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதனால் அதிமுக கட்சி மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே புரட்சி பாரதம் கட்சியின் தூங்களான சில தொண்டர்கள் புதிய கட்சியில் சேர்ந்து விடலாம் எனவும் சில தொண்டர்கள் தனித்து நிற்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் நமது புரட்சி பாரத கட்சியின் நிர்வாகிகள் மூன்று விதமாக கருத்துகளை தெரிவித்ததால் இதனை பரிசீலனை செய்து முடிவு எடுக்கலாம் என தெரிவித்தார். இதனால் அதிமுக – புரட்சி பாரதம் கட்சியினர் மத்தியிலான மக்களவை தேர்தல் கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.