வீணாகும் தண்ணீர் ஆட்சியாளர்களின் மெத்தனம்.

0
42
எல்லீஸ் அணை

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தமிழக அரசின் மெத்தன போக்கால் தடுப்பணை கட்டப்படாமல் வீணாகும் தண்ணீர் விவசாயிகள் வேதனை.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 73 ஆண்டுகளுக்கு முன்பு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 20,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி வழங்கி வருவதோடு, விழுப்புரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

உடைந்து போன அணை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலவீனமடைந்த கதவனைகள் முழுவதும் வெள்ளத்தில் உடைந்து சேதம் ஆனது. அதனை தொடர்ந்து தண்ணீர் ஊருக்குள் போகாமல் இருக்க அணையின் பக்க சுவர்கள் வெடிவைத்து தகர்த்தப்பட்டன. தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் 50 கோடி ரூபாய் செலவில் இந்த அணை சீரமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அந்த தொகை போதாது எனக் கூறி இதுவரை இந்த தடுப்பணை கட்டப்படாமலே தண்ணீர் வீணாக்கி போய் வருகிறது.

அரசின் மெத்தனப்போக்கு தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போனது என்கிறார்கள் இந்த பகுதி விவசாயிகள். அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்ட ஒரு மாதத்தில் உடைந்து போனது அதற்காக போராட்டம் நடத்திய திமுக ஆளும் கட்சியாக தொடர்ந்த உடன் உடைந்து போன தடுப்பணையை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

அணைக்கட்டு

தற்போது சாத்தனூரில் திறந்து விடப்படும் தண்ணீர் இரண்டு அணைகள் கட்டப்படாமல் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வீணாகி வெளியேறி வருவதை பொறுக்க முடியாமல் மக்கள் குமுறுகிறார்கள். மணல் மூட்டைகளை அடுக்கியாவது தண்ணீரை கேட்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

தமிழக அரசு அணை உடைந்த உடனே 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது,ஆனால் அந்த தொகையுல் அணை கட்ட முடியாது எனவே கூடுதல் நிதி ஒதுக்க கேட்டு பணிகளை ஓரு ஆண்டுகளாக பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் தற்போது பெய்ய இருக்கும் வட கிழக்கு பருவ மழை நீரும் தேக்கி வைக்கப்படாமல் வீணாகி போவப்போவது உறுதி.இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தான்.

வீணாகும் தண்ணீர்

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவு நீர் நிலைகள் இருந்தாலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலைதான் உள்ளது.ஒரு பக்கம் அணைகள் உடைந்து கட்டப்படாமல் உள்ளது,மறு பக்கம் ஏரிகளில் கிராவல் மண் அள்ளப்பட்டு மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேராமல் இருக்கும் நிலையும் உள்ளது.இதற்கெல்லாம் அரசு தான் அனுமதி தருகிறது.என்று வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here