ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசியின் முக்கியத்துவத்தை “உலக குழந்தைகள் நிலை 2023” முதன்மை அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது யுனிசெஃப் இந்தியா நிறுவனம்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & டிராபிகல் மெடிசின் (London School of Hygiene and Tropical Medicine), தடுப்பூசி நம்பிக்கைத் திட்டம் மூலமாக சேகரிக்கப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆய்வு செய்யப்பட்ட 55 நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி ஒரு உறுதியான நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்றுநோய் தொடங்கிய பிறகு, தடுப்பூசியின் மேல் உள்ள நம்பிக்கையானது, மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சரிவைக் கண்டுள்ளது, உதாரணமாக கொரியா குடியரசு, நியூகினியா, காணா, செனகல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சரிவையே குறிக்கிறது
மேலும், இந்த அறிக்கை வலியுறுத்துவது என்னவென்றால், தடுப்பூசி மீதான தயக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் 1) தவறான தகவல்களை புரிந்துகொள்ளுதல், 2) தடுப்பூசியின் செயல்திறன் மீதான நம்பிக்கை குறைவு, 3) தடுப்பூசி மீது பயம்.
கோவிட்19 நோய் தொற்றின் காரணத்தாலும், தூண்டுதலாலும், சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவில், உலகளவில் குழந்தைக்கான தடுப்பூசி மீதான நம்பிக்கை சரிவைக் காண்கின்றது. கோவிட்19 காலக்கட்டத்தில், பெருவாரியாக அனைத்து சுகாதார துறையினர் கொரோனா பணிகளுக்கு கவனம் கொடுக்கப்பட்டது, சுகாதார மையங்கள் கோவிட்19 தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டது, சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை, வெளியே வருவதற்கு தடை / முழு அடைப்பு போன்ற காரணத்தால் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் எல்லா இடங்களிலும் பெருவாரியாக தடைப்பட்டது. உலக குழந்தைகள் நிலை 2023 அறிக்கையில், உலக நாடுகளிடையே, இந்தியா தடுப்பூசியின் மீதான அதிக நம்பிக்கை கொண்ட நாடாக உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் சமூக பணியாளர்களின் அர்பணிப்புக்கான அங்கீகாரமாகும்.
மேலும், கோவிட்19 தொற்று நோயின் போது தடுப்பூசி இயக்கமானது, அதன்மூலம் குழந்தைகளுக்கான தடுப்பூசி மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. தடுப்பூசி குழந்தைகளை நோயிலிருந்து காத்து, ஆரோக்கியமாக வாழவும், சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிக்கவும் அனுமதிக்கிறது, இது மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். இந்த, தடுப்பூசித் திட்டம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் நன்மை பயக்கும் சமத்துவத்தின் முக்கிய அடையாளமாகும் என்று யுனிசெஃப்-ன் இந்திய பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி கூறினார்,

2019 மற்றும் 2021-க்கு இடையில் மொத்தம் 67 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசிகளை தவறவிட்டதாக அறிக்கை எச்சரிக்கிறது. 112 நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் அளவுகள் குறைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, 2022-ல், தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. போலியோவால் முடங்கிய குழந்தைகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் ஆண்டுக்காண்டு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை முந்தைய மூன்றாண்டு காலத்துடன் ஒப்பிடும்போது, போலியோவால் முடங்கிய குழந்தைகளின் எண்ணிக்கையில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது தடுப்பூசி முயற்சிகள் நீடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
2020-21-க்கும் இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரித்தப் போதிலும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 2.7 மில்லியனாக இருந்தது. இது இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகும்.
இந்தச் சாதனையானது, அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மற்றும் இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டத்தினால் சாத்தியமானது. விரிவான ஆரம்ப சுகாதார சேவைகள், வலுவான தடுப்பூசி திட்டம், சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் நாட்டில் உள்ள கடைசி குழந்தைக்கும் தடுப்பூசி சென்றடைய தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பும் கூட ஒரு தசாப்தமாக விளிம்பு நிலை குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் சிரமத்தை எதிர்கொண்டன.
சர்வதேச ஆரோக்கியத்திற்கான சமபங்கு நிறுவனத்தின் அறிக்கையில், ஏழ்மையான குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு எந்தவித தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை. இதுவே வளமான குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு 20-ல் ஒரு குழந்தைக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என அறிக்கை கூறுகிறது. இதில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகள் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளிலும், நகரத்தில் உள்ள ஏழை குடும்பங்களிலும் காணப்படுகிறார்கள். இக்குழந்தைகளின் தாய்மார்கள் பெரும்பாலும் பள்ளி சென்றதில்லை. அவர்கள் குடும்பத்தில் எவ்வித முடிவும் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலை பெரும்பாலும் மிகவும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளிடையே அதிகமாக காணப்படுகிறது.