உளுந்தூர்பேட்டை, அருகே வயலில் வேலை செய்த பெண்ணை கத்தியால் வெட்டிய வட மாநில வாலிபருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி வயது 48. இவர் அந்த பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே கையில் கத்தி மற்றும் அரிவாள் மனைவுடன் வட மாநில வாலிபர் ஒருவர் வந்தார். மகாலட்சுமி அருகே வந்த அந்த நபர் திடீரென அவரை கத்தியால் வெட்டினார். அதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்து அந்த வட மாநில வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தார். இதை அடுத்து கிராமத்து மக்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் ஒரு வீட்டின் மாடி மீது ஏறி அந்த வாலிபர் பதுங்கி இருந்தார். அவரது அருகே சென்று மடக்கி பிடிக்க மீன்றவர்களை அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றார். பின்னர் அந்த கிராமத்தில் இந்தி மொழி பேசத் தெரிந்தவர்கள் வட மாநில வாலிபரிடம் பேச்சு கொடுத்து அவரை சமாதானம் செய்தனர். பின்னர் அந்த வாலிபருக்கு குளிர்பானம் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அதை அவர் வாங்கி குடித்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை அங்கிருந்தவர்கள் அவரிடம் இருந்து பிடுங்கினர். இதனை அடுத்து கிராமத்து மக்களின் சிலர் வடமாநில வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரே ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை இடையே கிராம மக்கள் தாக்கியதில் அந்த வாலிபர் காயம் அடைந்து இருந்தார்.

இதனை அடுத்து அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் வயலில் தனியாக வேலை பார்க்கும் பெண்களிடம் நகையை பறிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மகாலட்சுமி கத்தியால் வெட்டினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் வட மாநிலத்திற்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது