சட்ட விரோத கருக்கலைப்பு – போலி மருத்துவர் கைது..!

2 Min Read

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆணா? பெண்ணா? என அறியும் பரிசோதனைக்காக வீட்டிலேயே கருக்கலைப்பு மையம் நடத்தியவர் அதனுடைய கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு;

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிராதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக பாலினத் தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழுவினருக்கு புகார் சென்றது. சென்னை பாலினத் தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு துணை சூப்பீரண்டு சரவணகுமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவம் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர்கள் ராமன் ஆகியோர் நேற்று காலை 10 மணி அளவில் இந்திலி கிராமம் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

கருக்கலைப்பு மாத்திரைகள்

அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் முருகேசன் வயது 43 என்பவர் சட்ட விரோதமாக கருகலைப்பு மையம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன் வீட்டை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அவர்கள் கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் அவருடைய வீட்டிற்கு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் கழித்து அதிகாரிகள் அதிரடியாக முருகேசனின் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அதிகாரிகள் முருகேசனை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அந்த பெண்களிடம் நடத்தி விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

போலி மருத்துவர்

இதையடுத்து அந்த 2 பெண்களையும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முருகேசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார். விசாரணையில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள முருகேசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வீட்டில் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்து தகவல் தெரிவிப்பதும், அந்த சிசு பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த பெண்ணுக்கு கருகலைப்பு செய்து வந்ததும் தெரியவந்தது. இதற்காக அவர் வீட்டிலேயே ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய வீட்டில் இருந்த இரண்டு சொகுசு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஸ்கேன் கருவி கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமினிடம் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் பூட்டி சீல்

மேலும் முருகேசனையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்த வீட்டை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து சின்னசேலம் போலீசார் வழக்குபதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். முருகேசன் ஏற்கனவே வெவ்வேறு இடங்களில் ஸ்கேன் கருவி மூலம் ஆணா? பெண்ணா? என பரிசோதனை செய்வதும், கருகலைப்பு செய்த வழக்கில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டிலேயே கருக்கலைப்பு மையம் நடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review