மக்கள் பிரதிநிதியாவது தான் எனக்கு ஆசை – கவர்னர் தமிழிசை..!

2 Min Read

மக்கள் பிரதிநிதியாவது தான் ஆசை என கவர்னர் தமிழிசை பரபரப்பு பேசினார்.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. அதேநேரத்தில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட தமிழிசை ஆர்வம் காட் டுவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இதனால் இது வந்ததி என்றவர், தேர்தலில் போட்டியில்லை என்பதை தமிழிசை மறுக்கவில்லை.

ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

அது சஸ்பென்ஸ் என்று கூறி வந்தார். இதற்கிடையே ராஜ்நிவா சில் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று மூன்றாண்டுகளை தமிழிசை நிறைவு செய்துள்ளார். இதற்கான சாதனை புத்தகத்தை வெளியிட்டு தமிழிசை கூறுகையில்;- தொடர்ந்து என்னை பொருத்தமட்டில் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

என் உள்ள விருப்பம் மக்கள் பிரதிநிதியாவது தான். ஆனால் அதை முடிவு செய்வது ஆண்டவனும் ஆண்டு கொண்டிருப்பவனும் தான் முடிவு செய்ய வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப்போகின்றேன் என்று சொல்லவில்லை. அதுவும் புதுச்சேரியில் தான் போட்டியிடப்போகின்றேன் என்று சொல்லவில்லை.

மக்கள் பிரதிநிதியாவது தான் எனக்கு ஆசை – கவர்னர் தமிழிசை

ஆனால் அதற்குள் இவள் வெளிமாநிலத்தை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள். என்னை வெளிமாநிலத்தை சார்ந்தவள் என்று தயவு செய்து கூறாதீர்கள். மகாகவி பாரதியாரை தாங்கிப்பிடித்தது இந்த மண். மகான் அரவிந்தருக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த மண்.

வேறு மாநிலம் என பார்க்காமல் இந்த மாநிலத்திற்கு பணியாற்றியுள்ளேன். எனக்கு வேறு மாநிலத்தவர் என்ற அடையாளத்தை கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இந்த மாநிலத்துக்கு ஒரு சகோதரியாகத்தான் பணியாற்றியுள்ளேன்.

மக்கள் பிரதிநிதியாவது தான் எனக்கு ஆசை – கவர்னர் தமிழிசை

இன்று வரை சுயலாபமோ, சுய ஏற்றமோ இல்லாமல் தான் பணியாற்றுகின்றேன், தயவு செய்து என்னை வேறுபடுத்தாதீர்கள். அது எனக்கு மனவலியை தருகிறது. எங்களை போல் நல்லவர்கள், தேர்தவில் போட்டியிட கிளம்பி வருபவர்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் சென்று விடுவோம்.

பின்னர் சரி இல்லாத அரசியல்வாதிகளிடம் கள் மாட்டிக் கொள்வீர்கள். மக்கள் பணியை செய்து கொண்டு இருக்கிறேன். புதுச்சேரியை வேறு மாநிலமாக நான் பார்க்கவில்லை. மருத்துவராக பணியாற்றிய போது பேப்பர்கள் (பணம்) நிறைய பார்த்து இருக்கிறேன்.

மக்கள் பிரதிநிதியாவது தான் எனக்கு ஆசை – கவர்னர் தமிழிசை

அந்த பேப்பருக்காக வேலை செய்ய வேண்டும் என்றால், நான் மருத்துவராக பணிபுரிந்து இருப்பான். அப்போது நல்லது நடக்க வேண்டும் என்றால் நல்லவரைகள் ஊக்கப்படுத்துங்கள், புதுச்சேரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் தொடருவேன். என்றார்.

மக்கள் பிரதிநிதியாவது தான் எனக்கு ஆசை – கவர்னர் தமிழிசை

அப்போது மக்கள் பிரதிநிதியா? அல்லது துணை நிலை ஆளுநராக என்று கேட்ட போது, இந்த போதைக்கு துணை நிலை ஆளுநராக பணியாற்றுகிறேன் என்றார். புதுச்சேரியில் மக்கள் பணியை தொடருவேன், வெளியூர்காரர் எனக்கூறாதீர்கள் என்று கூறி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பதை தமிழிசை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review