Hosur : ஆன்லைன் டிரேடிங்கில் கடன் 8 மாத கர்ப்பணி மனைவியுடன் கணவன் தற்கொலை..!

2 Min Read

ஓசூரில் ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் கடன் ஏற்பட்டதால் கர்ப்பணி மனைவியுடன் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

லட்சக்கணக்கில் கடன்

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் வாடகை வீட்டில்  வசித்து வந்தனர். சந்தியா, 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரை கவனித்துக்கொள்ள சந்தியாவின்தாய் திலகவதி (60) உடன் இருந்தார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார், ஆன்லைன் டிரேடிங் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் அதிகளவு பணத்தை முதிலீடு செய்து வந்துள்ளார் . மேலும் அவர் முதலீடு செய்த பணம் முழுவதையும் ஆன்லைன் டிரேடிங்கில் இழந்துள்ளார். இதனால் விஜயகுமாருக்கு லட்சக்கணக்கில் கடன் ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டார்.

ஆன்லைன் டிரேடிங் வர்த்தகம்

மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் அவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் இரவு உணவு அருந்திவிட்டு அவர்களது அறையில் உறங்க சென்றுள்ளனர் . நேற்று காலை, 11:00 மணி மேலாகியும் அவர்கள் வெளியே வராததால், சந்தியாவின் தாய் திலகவதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது பலமுறை கதவை தட்டி பார்த்தும் அவர்கள் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த திலகவதி , அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் , கதவை உடைத்து உள்ளே சென்ற போது, ஒரே கயிற்றில் விஜயகுமார், மனைவி சந்தியா ஆகியோர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது .

ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் கடன் ஏற்பட்டதால் கர்ப்பணி மனைவியுடன் கணவன் தற்கொலை

மேலும் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக அவர்களது அறையில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளனர் .

அந்த கடிதத்தில் , ஆன்லைன் டிரேடிங் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் நாங்கள் இந்த முடிவை எடுத்தலும் என்று விஜயகுமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் சிப்காட் போலீசார் , அவர்களது உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர் .

திருமணமான ஓராண்டில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் , ஓசூர் சப் – கலெக்டர் பிரியங்கா

விசாரணைக்கு பரிந்துரைக்கு செய்யப்பட்டு , வருவாய் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருமணமான ஒரே ஆண்டில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் அவரது மாத கர்ப்பிணி மனைவி தற்கொலை சம்பவம் ஓசூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்..

  • சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
  • மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104
Share This Article
Leave a review