உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.பொன்முடி இலாகா பறிப்பு

3 Min Read
ராஜகண்ணப்பன்

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

- Advertisement -
Ad imageAd image
பொன்முடி

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பொன்முடி

சொத்துக்கு குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி குற்றாவாளி என்று நிரூபிக்கப்பட்டதால், அவரின் எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பொன்முடி

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 1991 ஆண்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991-1996 ஆண்டைய காலகட்டத்தில் இருந்தார். பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை துவக்கினார்.பின்னர் 2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006, ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார். பிப்ரவரி 2009 இல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான ப. சிதம்பரத்திடம் தோல்வியுற்றார்.

பின்னர் அஇஅதிமுகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share This Article
Leave a review