ஆம்பூரில் பலத்த சூறைக்காற்று வீசியதில் சாலையோரம் இருந்த மரம் விழுந்து இரு இருசக்கர வாகனங்கள் சேதமானது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய பொதுமக்கள். மரம் வேறுடன் சாயும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து. இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டு பலத்த சூறைக்காற்று வீச தொடங்கியது.

இதனை தொடர்ந்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள பேருந்து நிலையம் எதிரே இருந்த இருசக்கர வாகன உதிரி பாகம் கடை அருகாமையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பூ மரம் ஒன்று பலத்த சூறைக்காற்று வீசியதில் வேரோடு ஆட்டோ மீது சாய்ந்து இருசக்கர வாகனங்கள் மீது விழுந்ததில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மரம் விழுவதைக் கண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்ததில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
மேலும் இது சம்பந்தமாக சிசிடிவி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஆம்பூர் நகர காவல் துறையினர் சாலையில் சாய்ந்து இருந்த மரத்தினை ஜேசிபி மூலம் அப்ரூவப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மரம் வேறுடன் சாயும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.