மழை வேண்டி யாகம் நடத்துவதை கேள்வி பட்டிருக்கிறோம்.சில இடங்களில் கழுதை கூட திருமணம் செய்வதை கூட கேள்வி பட்டிருக்கிறோம்.கோவையில் வினோதம் மழை வேண்டித் தவளைகளுக்கு திருமணம் செய்தது தான்.

கோவையில் அருகே வேடப்பட்டி கிராமத்தில் ருசிகரம் என்ற பகுதியில் தற்பொழுது கடுமையான வெயில் தாக்கத்தினால் வாட்டி வதைத்து வருகிறது. அதனால் அவ்ஊர் பொதுமக்கள் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி,ஒரு வினோத வழிபாடு ஒன்றை செய்ய திட்டமிட்டனர்.என்ன வினோத வழிபாடு.ஊர் பொதுமக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டியும்,அனைவரும் ஒன்று கூடி வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு, நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது. இதன்படி ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல் வேடம் அணிந்து தவளையை குரும்பபாளையம் வீதியில் வழியாக மாப்பிள்ளை ஊர்வலமாக கொண்டு சென்று மேளதாளம் முழங்க நடைபெற்றது.

தொடர்ந்து குரும்பபாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் இதர பொருட்களும் கொடுக்கப்பட்டு பெண் அழைப்பு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து கோலகலமாக நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்பொழுது கூடி இருந்த பொதுமக்கள் மங்கள அரிசியை தூவி வாழ்த்தினார். பின்னர் மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஊரை சுற்றி வந்து தவளைகள் குடும்பம் நடத்துவதற்காக ஊர் கிணற்றில் விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று உள்ளது. இந்த ருசிகர சம்பவத்தை காண ஏராளமான மக்கள் திரண்டனர்.இதற்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து அதை முனியப்பன் கோவிலில் படைத்து மூன்று கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த திருமண நிகழ்ச்சியில் முடிந்தவுடன் மழை வேண்டி குரும்ப்பாளையம் ஊரில் உள்ள துரை வீரசாமி கோவிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெற்றது. இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நடந்து வருகிறது.மழை பெய்ததா என்றால் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.