வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 ஆண்டுக்கு பின் நண்பர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு. மாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் கடந்த 2022ம் ஆண்டு இதே கிராமத்தில் புதியதாக வீடு கட்டி வந்தார்.
மேலும், அந்த வீட்டில் டைல்ஸ் போடுவதற்காக வடமாநில தொழிலாளர்களை வரவழைத்து பணிகளை செய்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் குமார் வயது (34) மற்றும் அமித் வயது (28) ஆகிய இருவரும் வீட்டின் மேல் பகுதியில் தங்கி டைல்ஸ் போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் நாளன்று வீட்டில் டைல்ஸ் போடும் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளியும் திடீரென காணாததால் கண்டு ரமேஷ் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.அதனை தொடர்ந்து வீட்டின் முன் பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு ரமேஷ் தகவல் தெரிவித்து உள்ளார்.
தகவறிந்து விரைந்து சென்ற போலீசார் வீட்டின் முன் பகுதியில் துர்நாற்றம் வீசிய இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார் பவன்குமார். குறிப்பாக, பவன்குமாருடன் வேலை பார்த்த அமித் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அமித்தை தேடி வந்தனர். இந்த நிலையில், அமித் பெங்களூர் கனகபுரா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து அங்கு தனிப்படை போலீசார் சென்றனர்.
அதனை தொடர்ந்து அமித்தை கைது செய்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணையில், சம்பவத்தன்று இரவு பவன்குமார் மற்றும் அமீத் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளது தெரியவந்தது.

மேலும், பவன் குமாரிடம் நான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், கடனாக பணம் வேண்டும் என்றும் அமித் கேட்டுள்ளார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அமித் அங்கிருந்த கத்தியால் பவன்குமாரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இரவோடு, இரவாக வீட்டின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அமித்குமாரை புதைத்துவிட்டு தப்பி ஓடியதாக போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து அமித்தை தனிப்படை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.