ஒசூர் அருகே பஞ்சர் கடையில் ஏர் கம்பிரஷர் வெடித்து 4 பேர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் லதிப்(38) என்னும் மாற்றுத்திறனாளி சொந்தமாக பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். அங்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் வேலை செய்து வந்தார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரியினை டிரைவர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய இருவர் ஓட்டி வந்து, லதிப் கடையில் லாரிக்கு காற்று பிடித்ததாக கூறப்படுகிறது, அப்போது ஏர் கம்பிரஷர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடையின் மேற்கூரை பறந்தது.

இதில் உரிமையாளர் லதீப், முருகன், முத்து, லிங்கப்பா ஆகிய 4 பேர் கை, கால்கள் முறிந்து இரத்த வெள்ளத்துடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒசூர் அரசு மருத்துவமனையில் அழைத்து வரப்பட்டு வேலை செய்து வந்த முருகன், லாரி டிரைவர்கள் இருவர் என 4 பேர் கை,கால்கள் முறிந்து ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை பெற்று, டிரைவர்கள் இருவரும் பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

லதிப், முருகன் ஆகிய இருவருக்கு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில், பாகலூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.