எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சிமோகாவில் ஈஸ்வரப்பா போட்டி .கர்நாடக பாஜகவில் கோஷ்டி மோதல்

0
21
கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா .

அமித் ஷாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா .

பாஜக தலைவர் அமித் ஷா , கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவை சந்திக்க அனுமதி வழங்காத நிலையில் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்பியுமான பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து சிமோகாவில் போட்டியிடப் போவதாக கே.எஸ்.ஈஸ்வரப்பா அறிவித்தார்.

கர்நாடகாவில் மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 28 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 7-ம் தேதி சிமோகாவில் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா .

கர்நாடக துணை முதல்வர் ,கே.எஸ்.ஈஸ்வரப்பா புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு கொடுத்த நிலையில் அவர் நேற்று பாஜக தலைவர் அமிதா ஷாவை சந்திக்க தவறினார் .

கர்நாடக மாநில பாஜக தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்துவருவதாக அவர் மீது குற்றம் சாட்டிய நிலையில் அமித் ஷா அவரை இன்று சந்திக்க மறுத்துள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது . இதனை தொடர்ந்து ஈஸ்வரப்பா இன்று சிமோகா திரும்பினார்.

சிமோகாவில் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்பியுமான பி ஒய் ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஈஸ்வரப்பா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் .

முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ராகவேந்திரா

இனி பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என்றும், தனது போராட்டத்தை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதாகவும், எனது போராட்டத்திற்கு சிமோகா தொகுதியில் நான் பெற போகும் வெற்றி பதில் கூறும் என்றும் அவர் கூறினார்.

பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அப்போதுதான் சிமோகாவில் போட்டியிடுவதில்லை என்ற தனது முடிவை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக அவர் நிபந்தனை விதித்தார்.

பிஎஸ் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை கண்டிக்கும் விதமாக , “ஒரு குடும்பம் மாநில பாஜகவின் அதிகாரத்தை வைத்திருக்கிறது, இது இந்து காரியகர்த்தாக்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.” என்று கர்நாடக பாஜகவில் குடும்ப அரசியில் நடைபெறுவதாக பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார் .

முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ராகவேந்திரா

அமித் ஷாவுடனான சந்திப்புக்கு முன்னதாக,வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவை மாற்றினால் ஒழிய, தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று ஈஸ்வரப்பா தெளிவுபடுத்தி இருந்தார் .

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வை “ஒரு குடும்பத்தால்” கட்டுப்படுத்துவதற்கு எதிராக தான் தனது போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஈஸ்வரப்பா கூறினார்.

காங்கிரசுக்கு குடும்ப கலாச்சாரம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். அதேபோல தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒரு குடும்பத்தின் கையில் பா.ஜ.க உள்ளது . அந்தக் குடும்பத்தில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டும். கட்சி தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களின் வேதனையை போக்க, நான் சுயாட்சியாக பாஜகவை எதிர்த்து போட்டியிடுவேன்,” என்றார்.

கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா .

இந்துத்துவா சித்தாந்தத்திற்காகவும், அமைப்புக்காகவும் போராடியவர்களின் பணி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார் . “குழப்பத்தை சரிசெய்ய நான் போட்டியிடுகிறேன், நான் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன், என்று ஈஸ்வரப்ப திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .

தனக்கு அரசியல் எதிர்காலம் கிடைக்காவிட்டாலும், கட்சியை சுத்தப்படுத்த வேண்டும் என, தன் மகன் தன்னிடம் கூறியதாக ஈஸ்வரப்பா தெரிவித்தார் .

ஈஸ்வரப்பாவின் இந்த அதிரடி அறிவிப்பு கர்நாடக பாஜக அல்லாது அணைத்து கட்சியினரையும் வியப்பில் ஆஸ்த்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here