விழுப்புரம் அருகே நடந்து வரும் பறக்கும் படை சோதனையில் புதுச்சேரியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.30 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருளுலத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் விழியோகம் செய்வதை தடுக்கவும், அப்போது கண்காணிக்கவும் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கபடும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு பறக்கும் படை 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் வீதம் 21 பறக்கும் படை 21 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழகம் புதுச்சேரி எல்லையில் கெங்கராம்பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் சக்திவேல் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது ரூ.30 லட்சம் இருந்தது தெரியவந்தது.

பின்னர் காரில் இருந்த அன்பழகள் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மதகடிபட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டண தொகையை கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
அப்போது பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விழுப்புரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாசியர் காஜா ஷாகுல் அமீதுவிடம் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து அவரிடம் கல்லூரி நிர்வாகம், வழக்கறிஞர் மூலம் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறி திரும்ப ஒப்படைக்குமாறு கூறினர்.
ஆனால் இந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக குழு உள்ளது. உரிய ஆய்வுக்கு பின்னர் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். தற்போதைக்கு வழங்கப்படமாட்டாது என்று கூறி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.