விழுப்புரத்தில் வேட்பு மனு தாக்கல்..!

2 Min Read

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

- Advertisement -
Ad imageAd image

இன்று காலை விழுப்புரத்தில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

முன்னதாக கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்குபெற்ற ஊர்வலம் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. அப்போது பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியர் பழனியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உடன் இருந்தார்.

விழுப்புரத்தில் வேட்பு மனு தாக்கல்

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பழனியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகமும் இந்த நாள் அமைச்சர் பொன்முடியும் எதிர் எதிரே சந்தித்து சிரித்து கொண்டனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

விழுப்புரத்தில் வேட்பு மனு தாக்கல்

அதிமுக சார்பில் பாக்கியராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது எதிரே வந்த அமைச்சர் பொன்முடி முன்னாள் அமைச்சர் டிவி சண்முகம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

பின்னர் பாக்கியராஜ் மாவட்ட ஆட்சியர் பழனி இடம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மக்கள் விரோதி திமுக ஆட்சியை எதிர்த்து அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

விழுப்புரத்தில் வேட்பு மனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளே இருக்கிறாரா? வெளியே இருக்கிறாரா? என்று தெரியும். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளி சங்கர் மாவட்ட ஆட்சியர் பழனி இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Share This Article
Leave a review