பஹத் பாசில் எங்க ஆளுங்க சார்., கேரக்டரை கொண்டாட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.!

0
96
பஹத் பாசில் எங்க ஆளுங்க சார்., கேரக்டரை கொண்டாட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.!

ஜாதி ரீதியிலான ஆட்கள் பலரும் மாமன்னன் படத்தில் வரும் நடிகர் பஹத் பாசிலின் ரத்தினவேலு கேரக்டரை கொண்டாட தொடங்கிவிட்டனர். இதை வைத்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ளது மாமன்னன் படம். ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், தனித்தொகுதி அரசியல், இடஒதுக்கீடு என்று பல்வேறு அரசியல்களை வலுவாக இந்த படம் பேசுகிறது.

முக்கியமாக என்னதான் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலில் மேலே வந்தாலும், தனித்தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆனாலும் கூட அவர்களால் கடைசி வரை அதிகார வர்க்கத்தில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

அவர்கள் மேலே வந்தாலும் கூட அவர்களை ஒடுக்க அங்கேயும் சாதி இருக்கிறது என்பதை வலுவாக இந்த படம் காட்டி இருக்கிறது. தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.


மாரி செல்வராஜ் என்னதான் இந்த படத்தை ஜாதி எதிர்ப்பு படமாக, சமூக நீதி படமாக எடுத்து இருந்தாலும். ஜாதி ரீதியிலான ஆட்கள் பலரும் இந்த படத்தில் வரும் பஹத் பாசிலின் ரத்தினவேலு கேரக்டரை கொண்டாட தொடங்கிவிட்டனர். ஹீரோவை கொண்டாடுவதற்கு பதில் வில்லனை தங்கள் ரோல் மாடல் போல காட்ட தொடங்கிவிட்டனர்.

ஜாதி வெறிபிடித்த வில்லன் கேரக்டரில் பஹத் சிறப்பாக நடித்து இருந்ததால் ஜாதி ரீதியிலான ஆட்கள் பலரும் அவர் எங்கள் ஜாதிதான் என்று உரிமை கொண்டாட தொடங்கிவிட்டனர்.
‘மாமன்னன் படத்தை பார்த்து திருந்துங்க’.. கோவை கலெக்டருக்கு டிக்கெட் அனுப்பிய பாமக நிர்வாகி “உங்களுக்கு உள்ளேயே ட்விஸ்ட் ஆகிட்டீங்களேடா” என்று சொல்லும் அளவிற்கு ஜாதிக்கு எதிரான படத்தின் காட்சிகளையே ஜாதியை கொண்டாட பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரத்தினவேலு கேரக்டர் இந்த படத்தில் ஜாதியை காக்க, ஜாதி பெருமை பேச என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய அளவிற்கு செல்ல கூடியவர்.

ஆனால் அதை வைத்து கூட பலரும் வீடியோ போட்டு அவரை கொண்டாடி வருகின்றனர். இவர் எங்கள் ஜாதிதான் என்று கூறி பல்வேறு சமூகத்தை சேர்ந்த நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உதாரணமாக இந்த படம் தேவர் மகனுக்கு பதில் சொல்லும் விதமாக, தேவர் மகனின் வடிவேலு கேரக்ட்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறி இருந்தார். இப்போது அதே தேவர் மகன் பாடலை வைத்து பஹத் பாசில் கேரக்டருக்கு வீடியோ போட்டுள்ளனர். போற்றிப்பாடடி பெண்ணே பாடலை வைத்து வீடியோ எடிட் செய்துள்ளனர்.

இதில் ரத்தினவேலுவை சிலர் படையாச்சி என்றும் கூறி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதை வைத்து நிறைய பாடல்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன. கடைசியில் ரத்தினவேலுவே தலித் சமூகத்தை சேர்ந்தவர்தான்.. என்றும் பாடல் போட்டு வீடியோ வெளியிட்டு உள்ளனர். பஹத் பாசில் வீடியோவை விசிக பாடல் ஒன்றுடன் சேர்த்து வைத்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். இன்னும் சிலர் ஜாதிக்கு எதிரான இன்னொரு படமான கபாலி படத்தின். கபாலி பாடலையும் கூட எடிட் செய்து ரத்தினவேலுவிற்கு போட்டுள்ளனர்.

பொதுவாக படங்களில் என்னதான் ஹீரோ பெரிய ஆளாக இருந்தாலும் வில்லன் சிறப்பாக நடித்தால் வில்லனை பலரும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இங்கே வில்லன் ஜாதி வெறி பிடித்தவனாக இருந்தாலும் பலர் அவருக்கு பாடல் போட்டு கொண்டாடி வருகின்றனர். கவுண்டர், தேவர், வன்னியர், நாடார் என்று பல சமூகத்து இளைஞர்களும் பஹத் பாசில் எங்க ஆளுங்க சார் என்று உரிமை கொண்டாடி வீடியோ வெளியிட்டு உள்ளனர். மாரி செல்வராஜ் வேறு ஒரு நோக்கத்திற்காக படம் எடுக்க, அது அப்படியே ட்விஸ்ட் ஆகி ஜாதியை கொண்டாடும் காட்சிகளாக
பஹத் பாசில் தோன்றும் காட்சிகள் மாறிவிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here