வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் அர்ஜூன்தாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்..

1 Min Read
வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் அர்ஜூன்தாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்..

வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது நடிகை துஷாரா விஜயனுடன்,நடித்த அநீதி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இந்நிலையில்  கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட் வே சினிமாஸ் தியேட்டருக்கு வந்த அநீதி பட நாயகன் அர்ஜூன் தாஸ்,நாயகி துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ்,அநீதி படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று  திரையரங்குகளில் காட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர்,இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

வசந்தபாலன் இயக்கம்,இயக்குனர் சங்கர் தயாரிப்பு,ஜி.வி.பிரகாஷ்குமார் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை தாம் எதிர்பார்த்த தாக கூறினார்.குறிப்பாக உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறிய அவர்,புதிய பரிணாமத்தில் மாறுதலான கதாபாத்திரத்தில்  தோன்றியது மகிழ்ச்சியே என கூறிய அவர்,மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review