விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- இருவர் பலி

2 Min Read

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- இருவர் பலி, இருவர் பலத்த காயம்

- Advertisement -
Ad imageAd image

வசக்காரப்பட்டி அருகேயுள்ள ஆர் ஆர் நகரில் செயல்பட்டுவரும் தனியார் பட்டசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து இருவர் பாலி , பலி எண்ணிகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் .

விருதுநகர் மாவட்டம் வசக்காரப்பட்டி அருகேயுள்ள ஆர் ஆர் நகரில்
முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆளை இயங்கி வருகிறது .

இதற்கு முறையே மாவட்ட மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினரிடம் அனுமதி பெற்ற பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது.

இதில் ஆண்கள் பெண்கள் என 50 கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகினறனர் .

இன்று காலை பட்டாசு ஆலையில் பட்டாசுக்காண ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக தீ மளமளவென பட்டாசுகளில் பரவி வெடி விபத்ததாக மாறியது .

இதன் தொடர்ச்சியாக பாட்டாசு ஆலையின் 3 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. அறையில் பணியாற்றிய முதலிப்பட்டியை சேர்ந்த வீரகுமார், கன்னிசேரி புதூரை சேர்ந்த காளிராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் 90 சதவீதம் தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர் .

பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும் அவர்கள் தீயினை முற்றிலுமாக அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

தீக்காயம் அடைந்த சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .

மேலும் உயிரிழந்த காளிராஜ் , வீரகுமார் ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .

சம்பவ பகுதிக்கு மாவட்ட வருவாய் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .

இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிவிபத்து சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் அச்சத்தையும் பதட்டறதையும் ஏற்படுத்தியுள்ளது .

Share This Article
Leave a review