அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதனால், விரைவில் 3வது அணி அமைக்கும் சூழலும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
கூட்டணி உறவை அதிமுக முறித்து கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து கொண்டதுமே, அதை முதலில் யாருமே நம்பவில்லை. அதிலும், திமுக கூட்டணி இப்போது வரை, எடப்பாடியின் பேச்சை நம்பவில்லை என்பது வேறு விஷயம்.

அண்ணாமலையால் முத்துவுக்கு வந்த நெருக்கடி உடைபட்ட உண்மை அவமானப்படுத்திய ரோகிணி ஆனால், தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து கொள்ளும் என்றே பரவலான கணிப்புகள் வெளியாகி வந்தன.
எனவே, எப்படியும் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிடம் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கும் என்று கணிக்கப்பட்டது. அப்போது அதிமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, நயினார் நாகேந்திரன், உள்ளிட்டவர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

ஆனால், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, 1996-ல் தனித்து போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே, கேசவ விநாயகம் செய்தியாளர்களிடம் பேசும் போதும்,
பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என்றார். இப்படி பாஜகவுக்கு உள்ளேயே இரு மாறுபட்ட கருத்துகள் வெடித்தன. அதேபோல, அதிமுகவுக்கு உள்ளே பாஜகவுக்கான சீனியர்கள் இருப்பதால், எடப்பாடியாஇ சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

ஆனால் பலன் இல்லை. அதேபோல, தோழமை கட்சி தலைவர்களான ஜிகேவாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், போன்றோரும், பாஜக – அதிமுக கூட்டணியை ஒட்ட வைக்க முயன்றனர். ஆனால், பலன் இல்லை.
பாஜக நிர்வாகிகளுடன் அதிமுக கூட்டணி குறித்து கலந்து பேசி, அது சம்பந்தமான ரிப்போர்ட் ஒன்றையும் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தாராம். அந்த ரிப்போர்ட்டில், “அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என வலியுறுத்தும் சீனியர் லீடர்களுக்கு, ஒரு அஜெண்டா இருக்கிறது.

தங்களுக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணி இருந்தால் தான் தாங்கள் ஜெயிக்க முடியும் என்று நம்புகின்றனர். பாஜக தனித்து போட்டியிட்டால் தங்களால் ஜெயிக்க முடியாது என்கிற அவநம்பிக்கை இருக்கிறது.
பாஜக தனித்து போட்டியிட்டால் தேர்தலில் போட்டியிடக்கூட சீனியர்கள் பலர் முன் வரமாட்டார்கள் என தோன்றுகிறது என்று மேலிடத்துக்கு ரிப்போர்ட் தந்தாராம் சந்தோஷ். அந்தவகையில், அதிமுகவுடன் எப்படியும் கூட்டணி முயற்சியை பாஜக கையில் எடுக்கும் என்று, எடப்பாடியை சமாதானம் செய்யும் முயற்சி தீவிரமாகும் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி கடைசி வரை அசரவேயில்லை. போகிற இடமெல்லாம், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவித்து வருவதை பார்த்து பாஜகவே அரண்டு போய்விட்டது பாஜக மேலிட தலைவர், அதிமுக சீனியர் ஒருவருக்கு போனை போட்டும் பேசியிருக்கிறார்.
ஆனால், எடப்பாடியோ, “முறிந்தது முறிந்தது தான்” என்று கறாராக சொல்லி விட்டாராம். இதுவரை பாஜக, அதிமுக இரு தரப்பிலுமே கூட்டணி முடிவாகவில்லை. ஆனால், இப்போது விஷயம் என்னவென்றால், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தரப்பில் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டதாம். அதுவும், பாஜக தரப்பில் 4 மத்திய அமைச்சர்கள் அதிமுக தலைமையுடன் பேசி வந்தும் கூட, சாதகமான பலன்கள் கிடைக்கவில்லையாம்.
அப்போது முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதால், அனைத்து பேச்சுவார்த்தையையும் நொந்துபோய் பாஜக நிறுத்திவிட்டதாம். ஆக, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை ஒருவராலும் தளர்த்த முடியவில்லை.. வெள்ளைக்கொடிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.