கும்மிடிப்பூண்டி அருகே தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனை மரங்களை . நெடுஞ்சாலைத் துறையினர் பிடுங்கி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்ட விரோத செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் தெரிவித்ததோடு நில்லாமல் பிடுங்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக முறையே பனை மரங்களை பயிர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் .
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியையும், ஆந்திர மாநிலத்தின் எல்லைப் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக திகழக்கூடிய மாதர்பாக்கம்-கவராப்பேட்டை நெடுஞ்சாலை சுமார் 15 கிலோமீட்டர் பசுமை நிறைந்த சாலையக உள்ளது.
இந்த சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னளுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் மாநெல்லூர் சிப்காட் அதீத வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது .
ஆனால் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலையோரம் வளர்ந்துள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்து அப்புறப்படுத்தி உள்ளனர் .
குறிப்பாக தமிழகத்தில் பனை மரங்களை வெட்டக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் , கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைதுறை சுமார் 30க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு அப்புறப்படுத்தி உள்ளது .

கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்
சாலை பராமரிப்பு என்ற பெயரில் மனிதர்கள் ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் , விரைவாக அழிந்து வரக்கூடிய பனை மரங்களை வேருடன் பிடுங்கி எரிந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பிடுங்கப்பட்ட பனை மரங்களுக்கு இழப்பீடாக 1000க் மேற்பட்ட பனை மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது , அகற்றப்பட்ட பனை மரங்கள் அனைத்தும் காய்ந்துஉயிர் அற்ற மரங்கள் என்றும் , எனினும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர் .