இன்று ஆங்கில புத்தாண்டு தலைவர்கள் வாழ்த்து..!

0
131
ஆங்கில புத்தாண்டு

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி: மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024ம் ஆண்டு மலரட்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாசிச பாஜ ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ்: 2024ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும். பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம்.

ஆங்கில புத்தாண்டு தலைவர்கள் வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் மத்தியில் ஒன்றிய அரசை இந்தியா கூட்டணி அமைக்கும் என்ற நிலையை உருவாக்க நம்மை நாம் ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான உறுதி எடுத்துக்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்.ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: 2024-ம் ஆண்டு மலரும் இந்த இனிய நேரத்தில் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கட்டும். கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைவரது வாழ்க்கையிலும் இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும்.சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சாதி, மத பேதமற்ற சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும்.பாமக தலைவர் அன்புமணி: புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: பிறக்க இருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக புத்தாண்டை ஆக்குவோம்.தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: அனைவருக்கும், ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன்,சமக தலைவர் சரத்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் எம்பி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் , இயேசு அழைக்கிறார் ஊழியம் தலைவர் டாக்டர் பால் தினகரன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் செங்கை பத்மநாபன்,தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here