மதிமுக கட்சி துவங்கபட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்று, இன்று 31-வது ஆண்டு துவக்க விழா கொண்டாடபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலையில் கட்சி கொடியேற்றபட்டது.
இதனை தொடர்ந்து மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தது அவற்றில் பல கானாமல் போனது. ஆனால் மதிமுக 31 ஆண்டுகளாக வீறுநடை போட்டு வருகின்றது.

எங்களது தலைவர் பணம், பதவி, ஆசை என அனைத்தையும் துறந்தவர் வைகோ. அவர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட குரல் கொடுத்தார்.
ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று அரசு கூறியது மகாத்மா காந்திக்கு எவ்வாறு இடம் கிடைத்ததோ, அதே இடத்தில் காமராஜருக்கும் சிலை அமைத்து தாருங்கள் என கேட்டு பெற்றவர் வைகோ.

தமிழினம் வாழ வைகோ பாடுபடுகிறார். அவரது பின்னால் நாங்கள் நிற்கின்றோம் என்றார். மேலும் முன்னாள் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வைகோ அணிமாறி விட்டதாக கூறியுள்ளார். எல்லா கட்சிகளும் ஒரே நிலைபாட்டில் இருப்பது இல்லை.
எங்கள் கொள்கையில் சமரசம் செய்தது இல்லை. தமிழ் இனத்துக்காக எப்போதும் பாடுபடுவோம். கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் எங்களுக்கு கிடைத்த தீப்பெட்டி சின்னம் கிடைத்ததால் அதில் போட்டியிட்டோம்.

துரைசாமிக்கு எங்களை பற்றி பேச அருகதை இல்லை. மதிமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. தலைமை பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், கட்சி பற்றி எந்த கருத்தும் பேசக்கூடாது. மதம், இனம் ரீதியாக மக்களை பிரிவினையை உண்டாக்கும் பாரதிய ஜனதா ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு, உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர் மோகன்குமார், சட்டதுறை செயலாளர் சூரி நந்தகோபால், மாவட்ட அவை தலைவர் ஆ.சேதுபதி,
மாவட்ட துணை செயலாளர்கள் பயனீர் தியாகு, தூயமணி, மதிமுக கவுன்சிலர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேலு, அன்பு என்கிற தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.