காட்பாடி தொகுதியில் சுதந்திரம் பெற்றதில் இருந்து தொடர்ந்து துரைமுருகனே சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகிறார். நான் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்கவே தான் மக்களுக்கு எனக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள். இதுகூட அவருக்கு தெரியவில்லை.
கேவிக்குப்பத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு கல்லூரி துவங்கப்படும் கவசம் பட்டு இறைவங்காடு இடையே ரூ.25 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும் கட்டப்படும் வடுகந்தாங்கலில் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

வேலூர் மாவட்டம், அடுத்த கேவிக்குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகந்தாங்கலில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தொகுதி நிதியின் கீழ் கட்டப்பட்டதை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இருந்தார்.

பின்னர் அங்கேயே திமுக பொதுக்கூட்டம் கேவிகுப்பம் ஒன்றியகுழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. அதில் எம்.பி கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் அமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான பொதுமக்களும் இந்த கூட்டத்தில் இருந்தனர். இந்த கூட்டத்தில் திமுக பொதுசெயலாளரும் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில்;-

பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் துரைமுருகனே காட்பாடியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என கேட்கிறார். நான் மக்களுக்காக நல்ல பல திட்டங்களை செய்துள்ளேன். அதனால் தான் மக்கள் மீண்டும் மீண்டும் எனக்கு வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக்குகின்றனர். இதுகூட அவருக்கு தெரியவில்லை.
மேலும் கேவிகுப்பத்திற்கும் காவிரி கூட்டு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்பேன். இங்கு வேறு கட்சியை சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் என்றாலும், இது என ஒன்றியத்திற்குட்பட்ட தொகுதி ஆகையால் இங்கு கேவிக்குப்பத்தில் அரசு கல்லூரி ஒன்றை கொண்டு வரவுள்ளோம். மேலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பனை கட்டப்பட்டு வருகிறது.

மேலும் கவசம்பட்டு இறைவன் காடு இடையேயும் சுமார் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் தடுப்பனையை கட்டி நீரை தேக்கி வைக்க உள்ளோம். இதனால் மக்கள் பயன்பெறுவார்கள் என பேசினார்.