தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் அவர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை திமுக வினர் வழங்கி வருகின்றனர்.பல மாவட்டங்களில் ரத்த தான முகாம்களையும் நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி வருகின்றனர்.
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு தங்கமோதிரம் வழங்கினார். இதுதவிர, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி விழுப்புரம் சட்ட பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ரத்த தானம் செய்தார் விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் ஆர். லட்சுமணன், இந்த நிகழ்வை விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நா. புகழேந்தி துவங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட திமுக இளைஞரணி,மாணவரணி,விவசாய அணி என பலரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

விழுப்புரத்தில் நடந்த முகாமிற்கு மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி ரத்ததானம் செய்தார். இந்த ரத்த தான முகாமை மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ நா. புகழேந்தி, தொடங்கி வைத்தார். மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், மாநில ஆதி திராவிட நலக்குழு துணைச் செயலாளர் புஷ்பராஜ், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்னியூர் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழுப்புரம் மாவட்ட நகர செயலாளர் சர்க்கரை வரவேற்றார்.
முகாமில் முண்டியம்பாக்கம் அரசும் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு ரத்தம் சேகரித்தனர். முகாமில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். மருத்துவ மனைகளில் ரத்தத்தை தானமாக பெற்றுக் கொண்டனர்.