செய்தியாளர் சந்திப்பு

இறந்தவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தினார்கள் மீறி கொலை மிரட்டல் விடுத்தனர் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் களஞ்சியம் பேட்டி.

காவல்துறையினர் முன்னிலையில் அராஜகங்கள்

வாக்கு சாவடிக்குள் நாம் தமிழர் கட்சியின் முகவர்களை அனுமதிக்காதது ஏன்? காலை முதல் காலை 11 மணி வரை தென் நெற்குணம் வாக்குச்சாவடியில் நடந்தது ஜனநாயகம் படுகொலை காலை முதல் ஒன்பது மணி வரை என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. தேர்தல் விதிப்படி தேர்தல் நடைபெறவில்லை காவல்துறையினர் முன்னிலையில் அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதேபோன்று,கடவம்பாக்கம் வாக்குச்சாவடியில் திமுகவினர் பயங்கர ஆயுதங்களை கொண்டு நாம் தமிழர் கட்சி முகவர்களை மிரட்டி உள்ளார்கள் உயிரச்சம் ஏற்படுத்தி இருக்கிறார்கள் இது தொடர்பாக ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

களஞ்சியம்

வழக்கு வாபஸ் வாங்க கோரி மிரட்டல்

மாறாக வழக்கு வாபஸ் வாங்க கோரி மிரட்டல் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் இறந்து போனவர்களின் வாழ்க்கை செலுத்துவதற்கு திமுக முயற்சி செய்தது எனவே நாங்கள் புகாரியில் குறிப்பிட்டது போல சேந்தமங்கலம் தென்மேற்கு பருவம் உப்புவேலூர் இந்த பகுதியிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வேட்பாளர் மு களஞ்சியம் மனு அளித்துள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

களஞ்சியம்

கள்ள ஓட்டு

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் நடந்து முடிந்த வாக்குப்பதிவின் போது பல இடங்களில் கள்ள ஓட்டுகளை போடுவதற்கு திமுக கூட்டணியினர் முயற்சி செய்தனர் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் இவற்றினை தடுக்க முயன்ற நாம் தமிழர் கட்சி தொண்டர்களை திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.குறிப்பாக தென் நெற்குணம், பரிசு ரெட்டி பாளையம், சேந்தமங்கலம், ,கடவம் பாக்கம், ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவும் போது மாலை 5 மணி முதல் 6 மணி வரை இறந்தவர் வாக்குகளை போடுவதற்கு திமுக கூட்டணி கட்சியினர் முயற்சித்தனர் இவற்றினை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்கள்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவினரின் அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு அராஜக செயலியில் ஈடுபட்டனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here