கனிமொழி காளியம்மாள்

தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் தி.மு.க மூத்த தலைவர்கள் குறித்து பொய் செய்திகள் பரப்பப்படுவதாகக் கூறி, யூடியூப் சேனல் மீதும், நா.த.க மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள் மீதும் தி.மு.க மகளிர் அணியினர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி – மயிலாடுதுறை நா.த.க வேட்பாளர் காளியம்மாள்,தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் தி.மு.க மூத்த தலைவர்கள் குறித்து பொய் செய்திகள் பரப்பப்படுவதாகக் கூறி, ‘ராவணா’ யூடியூப் சேனல் மீதும், நா.த.க மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள் மீதும் தி.மு.க மகளிர் அணியினர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

சீமான் காளியம்மாள்

தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தேர்தலை எதிர்கொள்கின்றன. தி.மு.க வேட்பாளரும் சிட்டிங் எம்.பி.யுமான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில், காளியம்மாள் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. ‘ராவணா’ யூடியூப் சேனல் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில், தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் தி.மு.க மூத்த தலைவர்கள் குறித்து பொய் செய்திகள் பரப்பப்படுவதாகக் கூறி, ‘ராவணா’ யூடியூப் சேனல் மீதும், நா.த.க மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள் மீதும் தி.மு.க மகளிர் அணியினர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

தி.மு.க மகளிர் அணி மாநில சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.எம். யாழினி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: “காளையம்மாள் ராவணா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கனிமொழி மற்றும் பிற மூத்த தலைவர்கள் பற்றிய ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கனிமொழியின் நற்பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தி, ஏமாற்றி வாக்குகளைப் பெற காளியம்மாள் முயற்சி செய்கிறார்” என்று புகார் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த புகாரில், “எந்த ஆதாரமும் இல்லாமல், தி.மு.க வேட்பாளர் கனிமொழி மீது, சர்க்கரை ஆலை வாங்கியது குறித்து, ஒரு நேர்காணலில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், இது அவதூறானது” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளியம்மாள்

இது போன்ற அவதூறான கருத்துக்கள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொது நடத்தை மற்றும் உயர் தரத்தை பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 123 (4)-ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க மகளிர் அணி மாநில சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.எம். யாழினி என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here