ஓசூரில் மகாத்மா காந்தி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஓசூருக்கு மிக அருகில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளதால் அங்குள்ளவர்கள் ஓசூர் பகுதிகளில் நிலங்களை வாங்கி அதனை பதிவு செய்ய ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இந்த அலுவலகத்தில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக அளவு பணம் வசூலிப்பதாக பொது மக்களிடமிருந்து வந்த புகாரை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 7 பேர் கொடை குழுவினர்
அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையால் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
சார் பதிவாளர் ரகோத்தமன் விடுமுறை என்பதால் துணை சார்பதிவாளர் சகிலா பேகம் பணியில் இருந்துள்ளார். மேலும் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காக காத்திருந்துள்ளனர்.
மாலை 5.30 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கணக்கில் வராத பல லட்சம்ஐ ரூபாய் பணம் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை நள்ளிரவு வரை நடைபெறும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.