கர்நாடகத்தை குறிவைத்து நாச வேலையில் ஈடுபட கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு தட்சிணா, கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஆட்டோவில் எடுத்துச் சென்ற குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாக பயங்கரவாதி சாரிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் சிலர் நாச வழியில் ஈடுபட திட்டம் பதுங்கி இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு என்.ஐ.எ அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளை கண்காணித்து தீவிர சோதனையும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுல்தான் பாளையம் கனக நகர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நுழைந்த அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றுவிளைத்து பிடித்தனர். மேலும் அந்த வீட்டில் கை துப்பாகிகள், தோட்டாக்கள், வாக்கி டாக்கி, வெடி மருந்துகள், செல்போன்கள் போன்றவை இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் பிடிபட்டவர்களிடம் கிடக்கு பிடி விசாரணை நடத்தினார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது பிடிப்பட்டவர்கள் சையது சுகைல், உமர், ஜாஹித்,முதாசீர் மற்றும் பைசல் ஆகியோர் என்பதும், அவர்கள் பெங்களூருவில் நாச வேளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
மேலும் அங்கு இருந்த 12 ஃபோன்கள் 45 தோட்டாக்கள் ஏழு கயிறு துப்பாக்கிகள் வாக்கி டாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து அவர்கள் ஐந்து பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர்கள் பெங்களூரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை குறி வைத்து பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டது தெரிந்தது. மேலும் அவர்கள் ஐந்து பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது. சிறையில் இருந்த போது 2008 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நசீர் மற்றும் தொழிலதிபர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜூனைத் ஆகிய இரண்டு பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் அறிவுரையின்படி பெங்களூருவில் பயங்கரவாத திட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சிறையில் இருந்து வெளியான 5 பேரும் கூட்டாக சுல்தான்பாளைய பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கி இருந்து வந்துள்ளனர். அங்கு வைத்து சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஹெட்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலை என் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்து போன்றவை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்த பயங்கரவாதிகள் சந்தேகப்படும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், கை துப்பாகிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள் மற்றும் வாக்கிடோக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆர் டி நகரில் தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான ஐந்து பேரும் ஜூன் கைது செய்யப்பட்டு பரப்பனாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த சமயத்தில் பெங்களூரில் கடந்து 2008 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி நசீர் என்பவர் உடன் இணைத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.அதன் பிறகு நசிரும் ஜுணைத்தும் சேர்ந்து தற்போது கைதாகி உள்ள ஐந்து பேரையும் நாச வேலையில் ஈடுபடுத்த மூளைச்சலவை செய்துள்ளனர். அதன்படி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த ஐந்து பேரும் சுல்தான் பாழையாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வந்துள்ளனர். அங்கிருந்தபடியே அவர்கள் பெங்களூருவில் நாசம் வழியில் ஈடுபட ஆயுதங்கள் வெடிப்பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் கைது செய்துள்ளோம்.
ஐந்து பேர் மீதும் சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக நசிரும் இரண்டாவது குற்றவாளியாக ஜெனித்தும் சேர்க்கப்பட்டுள்ளன. கைதான ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட்ட சதி திட்டம் தீட்டிய ஜுனைத் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க அனைத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கைதாகி உள்ள ஐந்து பேரும் வெடிகுண்டுகளை தயாரிக்கவும் ஆயுதங்களை கையாளுவோம் பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. பெங்களூர் மெஜஸ்டிக் பி எம் பி சி பஸ் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் குண்டுகளை வைத்து வெடிக்க செய்து நாச வேலையில் ஈடுபட தயாராகி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கைதான ஐந்து பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிலில் உள்ள என் ஐ ஏ கோர்ட்டில் ஆதார் படுத்தினார். அப்போது ஐந்து பேரும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கூறினார். இதை அடுத்து நீதிபதி அவர்களுக்கு 15 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஐந்து பேரையும் குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநில முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.