பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டிய மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் வழக்கம் போல் தமிழ் பாடத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் பயின்ற 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 13ஆயிரத்து 998 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் எழுதுகிறார். மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர்.
இது தவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும் சிறைவாசிகள் 125 பேரும் எழுதுகின்றர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வறைக்குள் செல்போன் உள்ள பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தேர்வு அறையில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் 43 ஆயிரத்து 200 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு நடித்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டம், வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றுபவர் நேசபிரபா.
இவர், இன்று துவங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டியதுடன் வினாத்தாள்களையும் பெற்று வராமல் பணியில் சரியாக செயல்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மாவட்ட கல்வி அதிகாரி நேசபிரபா சரியாக செயல்படவில்லை என சென்னை பள்ளிகல்வித்துறைக்கு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் தமிழக கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அப்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கிய நாளில் கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.