குமரியில் காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம். போலீசார் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக திடீரென சாலை மறியலாக மாறியது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது.
குமரி மாவட்ட மேற்கு காங்கிரஸ் கட்சியினரின் சார்பில் இன்று குழித்துறை பகுதியில் வைத்து தமிழக மீனவர்களின் நலனுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்காததும், பல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

அப்போது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கண்டன போராட்டம் முடிவடையும் போது காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டமாக தொடங்கிய போராட்டம் திடீரென சாலை மறியலாகவும் மாறியது. அப்போது நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தக்கலை சரக டிஎஸ்பி உதயசூரியன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எந்தவித முடிவும் ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.