விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம்..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து தை மாத அறுவடைக்கு 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தயாராக உள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் விவசாயிகள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் டெல்டா மாவட்டத்திற்கு அடுத்த படியாக நெற்பயிர் சாகுபடியில் முன்னிலை வகித்து வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு

அவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை சம்பா பருவத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை பணி தொடங்கி இருக்கிறது. ஆனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அங்கு விவசாயிகள் காத்திருக்கும் நிலை மற்றும் இடைதரகர்களின் நடவடிக்கை உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஜனவரி முதலில் நேரடியாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதுவரை திறக்கப்படாததால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து உள்ள மற்றும் விவசாயிகள் ஏமாற்றம் மடைந்துள்ளனர்.

எனவே விரைந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கபட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விழுப்புர மாவட்ட விவசாய சங்க தலைவர் கலிவரதன் கூறுகையில்;- விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயத்தின் பிரதானமாக நெல் சாகுபடி உள்ளது. உரிய விலை கிடைக்க வேண்டும் என்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த ஆண்டு ஜனவரி முதல் திறக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் கோரிக்கை

ஆனால் தற்போது வரை திறக்கப்படாததால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றார்.துறை அதிகாரிகளிடம் கேட்ட போது விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தான் அறுவடை துவங்கியுள்ள நிலையில் முதற்கட்டமாக 20 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் படிப்படியாக திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Share This Article
Leave a review