அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, பில்லாவுடன் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘தீனா’ – அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

2 Min Read

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தீனா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

அண்மை காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் அடுத்தடுத்து தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களில் மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது.

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளில் பில்லாவுடன் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘தீனா’

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாரின் சில ஹிட் திரைப்படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்து எழுந்து வருகிறது.

குறிப்பாக மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஹிட் திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பில்லா

இதை அடுத்து அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ‘பில்லா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அஜித்குமாரின் ‘தீனா’ திரைப்படமும் டிஜிட்டல் பதிப்பில் மே 1 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீனா

கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தீனா’. அதில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இப்படம் மாபெரும் ஹிட் படமாக வலம் வந்தது.

அஜித் ரசிகர்கள்

‘தீனா’ படத்திற்கு பின்னரே நடிகர் அஜித்குமாருக்கு ‘தல’ என்ற பட்டம் அவரது ரசிகர்களால் கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படம் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a review