ஏற்காடு மலைபாதை வனப்பகுதியில் சூட்கேசில் பெண் பிணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காணலாம்.

சேலம் மாவட்டம் அடுத்த ஏற்காடு தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு வனப்பகுதியில் மலைபாதை அமைந்துள்ளது. இந்த மலைபாதை 40 அடி பாலத்திற்கு அருகில் வனப்பகுதியில் ஒரு பெரிய சூட்கேஸ் வீசப்பட்டிறுந்தது.

ஏற்காடு மலைபாதை வனப்பகுதியில் சூட்கேசில் பெண் பிணம் – போலீசார் தீவிர விசாரணை
அப்போது வீசப்பட்ட சூட்கேஸ் சந்தேகபப்டும்படி இயந்ததாலும் துர்நாற்றம் வீசியதாலும் வனத்துறையினர் ஏற்காடு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமல அமின் ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ் மோகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேகபபடும் படி வீசப்பட்டிருந்தது சூட்கேஸை வனப்பகுதியில் இருந்து எடுத்தனர்.

பின்பு தடயவியல் நிபுணர்களுக்கு முன்னிலையில் சூட்கேஸை திறந்து பார்த்தால் அதில் பெண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது சூட்கேசில் பெண் பிணத்தை அடைத்து மலை பாதை வனப்பகுதியில் வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.