“ரொம்ப சந்தோஷமா இருக்கு” – இமான் இசையில் பாடவுள்ள கூலித் தொழிலாளியின் மகள் தர்ஷினி..!

2 Min Read

கிராமிய பாடல் பாடி இணையத்தில் வைரலான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற சிறுமிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறி இசையமைப்பாளர் டி. இமான் உறுதியளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கிராமிய பாடல் பாடி, சமூக வலைத்தளங்களில் வைரல். இசை அமைப்பாளர் டி. இமான் பாராட்டு.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் பம்பை உடுப்பை இசைக்கலைஞர். இவரது மகள் தர்ஷினி. இவர் அனந்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தினமும் பள்ளிக்கு சென்று வரும் போது வயல் வேலில் மூதாட்டியர்கள் வயல் வேலையை பார்த்து கொண்டிருந்த போது அந்த சிறுமி அவ்வழியாக வரும் போது அந்த முதாட்டியர் அந்த சிறுமியை ஒரு பாடல் ஒன்று பாட சொன்னார்.

இமான் இசையில் பாடவுள்ள கூலித் தொழிலாளியின் மகள் தர்ஷினி

அந்த 7ம் வகுப்பு மாணவி அந்த முதாட்டியரிடம் பாடலை பாடியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பாடலை கேட்ட முதாட்டியர்கள் அருமையாக பாடலை பாடினாள் என்று அங்கிருக்கும் முதாட்டியர்கள் அந்த சிறுமி பாராட்டினார்கள். பின்னர் அங்கிருக்கும் முதாட்டியர்கள் அந்த சிறுமியை பாடல் ஒன்று பாட சொல்லி செல்போனில் வீடியோ காட்சி எடுத்துள்ளனர். அந்த பாடலை பாடும் போது கார்த்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகளை சமுக வலைதளத்தில் பதிவிட்டு, வீடியோ வைரலாகி வருகிறது.

இமான் இசையில் பாடவுள்ள கூலித் தொழிலாளியின் மகள் தர்ஷினி

அந்த பாடல் வைரல் ஆனதை தொடர்ந்து, இந்த பாடலை சமுக வலைதளங்களில் பார்த்த இசை அமைப்பாளர் டி. இமான் தர்ஷினியின் தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, பாராட்டி வாழ்த்து தெரிவித்து, தனது மகளுக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி உறுதியளித்துள்ளார் டி. இமான்.

Share This Article
Leave a review