ஆங்கிலத்தில் குக்கும்பர் என்ற அழைக்கப்படும் வெள்ளரி நம்மை கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது . இந்த வெள்ளரிப் பிஞ்சு மற்றும் வெள்ளரிப் பழங்களில் இறக்கையாகவே நீர்ச்சத்து அமையப் பெற்று இருப்பதுதான் இதனின் சிறப்பம்சம் .
வெள்ளரிப் பிஞ்சு மற்றும் வெள்ளரிப் பழத்தை நாம் உண்ணும் போது நமக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இந்த பழம் பெரும்பாலும் கோடைக் காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மேலும் வெள்ளரிப்பிஞ்சு மற்றும் வெள்ளரிப்பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது.

உயிர்ச்சத்து சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உயிர்ச்சத்துகள் பி 1, பி 6 மற்றும் கே, ஃபோலேட், காப்பர், மெக்னீசியம் மற்றும் உணவு நார்ச்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.
வெள்ளரிப் பழம் சுவையில் இனிப்பும் இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். சாப்பிட மாவு போலவும் முலாம்பழத்தைப் போன்றும் சுவை இருக்கும். அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களும் இந்த பழத்தைச் சாப்பிடலாம். கூடுதல் சுவைக்காக இந்த பழத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடுவார்கள் .
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாவரமான இது உலக அளவில் பல இடங்களில் விளைவிக்கப்படுகிறது. மணல் பாங்கான இடங்களில் அதிகப்படியாக விளைவிக்கப் படுகின்ற வெள்ளரிப் பிஞ்சு மற்றும் பழம் , விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரையிலும், பாணாம்பட்டு மற்றும் பில்லூர் பகுதிகளில் அதிகப்படியாக விவசாயம் செய்யப் படுகின்றது .
இப்படியாக இருக்க , இந்த வருட திடீர் பருவநிலை மாற்றாதல் , வெள்ளரி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர் . எந்தவருடமும் இல்லாததுபோல் , பெருமளவு முதிலிடு செய்துள்ளதாகத் தெரிவித்த விவசாயிகள் , எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் , பயிர்களை மாடுகளை விட்டு மேய்த்து வருவதாகத் தெரிவித்துள்ளனர் .

‘தி நியூஸ் கலெக்ட் இணையத்திடம்’ பாணாம்பட்டை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற விவசாயி கூறும் போது “3 மாத பயிரான வெள்ளரி பாணாம்பட்டு மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் , 100 கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டு வருகிறது . வெள்ளரி விளைச்சலை நம்பி 1000 கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர் . கோடைக் காலங்களில் அதிகம் பயிரிடப்படும் இந்த வெள்ளரி பயிரிடுவதற்கு வேலை ஆட்கள் கூலி , தண்ணீர் , தீவனம், உரம் என ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வரை செலவாகும் . இதனை முறையே பயிர் செய்தல் விவசாயிகளுக்கு , ஏக்கர் ஒன்றிற்கு 2 லட்சம் ரூபாய் வரையில் லாபம் ஈட்டலாம் . ஆனால் இந்த வருடம் திடீர் என்று பெய்த கல் மழையால் , பயிர்களில் தண்ணீர் தேங்கி மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறோம் . விவசாயிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை இதில் பாதிக்கப்பட்டுள்ளோம் .
நல்ல விளைச்சல் இருக்கும் போது வெள்ளரிப் பழம் கிலோ 10 ரூபாய்க்குச் சிறு வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து பறித்துச்செல்வார்கள் . ஆனால் தற்பொழுது போதிய விளைச்சல் இல்லாமல் வெள்ளேரிக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் கிலோ 20 ரூபாய் வரையிலும் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள் ஆனால் தோட்டத்தில் பழம் கிடைக்காத சூழ்நிலையில் வேறு பகுதிகளுக்குச் சென்று வெள்ளரி கொள்முதல் செய்கின்றனர் . இதனால் பாணாம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார் .
மேலும் நம்மிடம் சசிகலா என்ற விவசாயி பேசியபோது “தான் 28 வருடங்களாக வெள்ளரி விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் , எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார் . கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் இது போல் ஒரு நஷ்டத்தைச் சந்தித்ததில்லை என்றும் , இந்த கல் மழையால் சுத்தமாக விளைச்சல் இல்லாமல் வெள்ளரி தோட்டத்தில் மாடுகளை வைத்து மேய்த்து வருவதாகத் தெரிவித்தார் . மேலும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார் .