கள்ளக்காதலி சரியாக பேசாததால் மது வாங்கி கொடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தேன். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டியை அடுத்த கரும்பூர் ஜோதி நகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டினில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வசந்தி வயது (31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அப்போது வசந்தி விழுப்புரத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 4-ம் தேதி வீட்டு வேலைக்கு சென்ற வசந்தி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் குப்புசாமி புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இதற்கிடையில் தாவணிப்பாக்கம் மலட்டாற்றில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் பெண் பிணம் கிடந்தது. அது பற்றி தகவல் அறிந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், இறந்து கிடந்தவர் குப்புசாமி மனைவி வசந்தி என்பது தெரியவந்தது. இதை அடுத்து வசந்தியின் செல்போனை கைப்பற்றி சோதித்த போது, பண்ருட்டியை அடுத்த ரெட்டிக்குப்பத்தை சேர்ந்த விவசாயி ஜெயவர்த்தனன் வயது (55) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் வசந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

எனக்கு ரெட்டிக்குப்பத்தின் பக்கத்து ஊரான கரும்பூர் ஜோதி நகரை சேர்ந்த வசந்தி என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த ஒரு வருடமாக நாங்கள் பல இடங்களில் சந்தித்து பழகி வந்தோம். ஆனால் 4 மாதங்களாக வசந்தி சரியாக என்னிடம் பேசுவதில்லை. இது பற்றி அவரிடம் கேட்ட போதும் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் அடகு நகைகளை மீட்டு தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி கடந்த 4-ம் தேதி வசந்தியை அழைத்தேன்.

அப்போது அன்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்த அவரை எனது பைக்கில் தாவணிப்பாக்கம் மலட்டாறு பகுதிக்கு அழைத்து சென்றேன். ஏற்கனவே மது உணவு வாங்கி வைத்திருந்தேன்.
பின்னர் இருவரும் மது அருந்தினோம். பின்னர் வசந்தியிடம் என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய். அப்போது அழைக்கும் இடத்திற்கு வர மறுக்கிறாய் என்று கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, வசந்திக்கு போதை அதிகமான நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். போலீசில் வசந்தி கணவர் புகார் கொடுத்த நிலையில், போலீசார் எனது செல்போன் சிக்னலை ஆய்வு செய்து என்னை கண்காணித்து வருவது எனக்கு தெரியவந்தது.
இதை அடுத்து தடயங்களை மறைப்பதற்காக 15-ம் தேதி மீண்டும் தாவணிப்பாக்கம் மலட்டாறு பகுதிக்கு சென்று வசந்தியின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு பண்ருட்டிக்கு வந்து விட்டேன்.

அந்த பகுதி புதர்களால் நிறைந்தது. மக்கள் யாரும் அங்கு வரமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் போலீசார் கண்டு பிடித்து என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து ஜெயவர்த்தனன் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.