கோவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளான கோவைப்புதூரை சேர்ந்த ரவி – தேவிகா தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்த நிகழ்விற்கு கடந்த 1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் தாயார் அழைத்து வரப்பட்டிருந்தார். அவரிடம் அண்ணாமலை ஆசி பெற்றார். இந்த நிகழ்வில் வானதி சீனிவாசன் அர்ஜுன் சம்பத் சுதாகர் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து அண்ணாமலை ஓசூர் சாலையிலிருந்து மேளதாளம் முழங்க 2000க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.