கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த விஜயின் தந்தை போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை .
கோவை மாவட்டம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 28ம் தேதி 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி தேவரெட்டியூரைச் சேர்ந்தவர் முனிரத்தினம்,50; கூலி தொழிலாளியின் மகன் விஜய் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது .
கோவை போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 5
தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் , குற்றவாளி விஜய் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் .
விஜயிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட நகைகள் பல்வேறு இடத்தில பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது . இந்த நிலையில் கடந்த 5ந் தேதி இரவு கோயம்புத்தூர் போலீசார் தேவரெட்டியூரில் உள்ள விஜயின் வீட்டிற்கு வந்து விஜயின் தந்தை முனிரத்தினத்தை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் முனிரத்தினம் ஒரு செல்போன், 38 கிராம் நகையை வீட்டில் இருந்ததாக கோவை போலீசில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து பின்பு அவரை நேற்று விடுவித்தனர். தொடர்ந்து முனிரத்தினத்திடம் விஜயை ஒப்படைக்குமாறு எச்சரித்து உள்ளனர். இதனால் நேற்று இரவு முனிரத்தினம் போலீசாரின் விசாரணைக்கு பயந்து வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மாரம்மாள் கம்பைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.